• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Friday, April 17, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

கிளிநொச்சியின் தங்க மகள் தனுசியா

dineshpress by dineshpress
February 16, 2017
in இலங்கை
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

20-12-2016 அன்று 2016இற்கான இலங்கையின் தேசிய மேசை பந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் பருத்திதுறையில் இடம்பெற்றது. தனி போட்டில் இலங்கையில் இருந்து 11 மாவட்டங்களில் இருந்து 11 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அநுராதபுரம்,மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, யாழப்பாணம், கிளிநொச்சி,கொழும்பு போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்

இறுதிப் போட்டி கிளிநொச்சிக்கும் கொழும்புக்கும் இடையே இடம்பெற்றது. எவரும் எதிரபார்க்காத வகையில் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய கிளிநொச்சி போட்டியாளர் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய மேசைப் பந்தாட்ட போட்டியின் வெற்றியை தனதாக்கி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

பன்னிரண்டு வயது பிரிவில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கத்தை பெற்று கிளிநொச்சியின் தங்க மகளாக மாவட்டம் திரும்பியவர் உதயநகர் மேற்கைச் சேர்ந்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி செல்வி பாலகிருஸ்ணன் தனுசிகா.

1983 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சியில் குடியேறியவர்கள்தான் தனுசியாவின் பெற்றோர். தனுசியாவின் தாய் ஒரு மாற்றுவலுவுள்ளோர், தந்தை சிறுவியாபாரம் செய்து வருகின்றார். தனுசியாவின் தாய் விஜயலக்சுமி 1990 களிலிருந்து மாவட்ட மாற்றுவலுள்ளோர் அமைப்பில் இணைந்து அவர்களுக்காக செயற்பட்டு வருவதோடு, மேலும் பல பொதுப் பணிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றார். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது இரண்டு மகள்களையும் படிப்பித்து வருகின்றார்கள். இதில் தனுசியா இரண்டாவது மகள். தற்போது தரம் ஒன்பதில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனுசியா இயல்பாகவே விளையாட்டில் அதிகம் ஈடுபாடுகொண்டவர், அர்ச்சுனனுக்கு துரோனர் வாய்த்தது போன்று தனுசியாவுக்கு இரண்டு துரோனர்கள் குருவாக கிடைத்துள்ளனர் ஒருவர் மாவட்ட மேசை பந்து மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எஸ்.குமார் மற்றையவர் பாடசாலை விளையாட்டு பொறுப்பாசிரியர் ம.வினோகாந்தன் இவர்களே தனுசியாவை கிளிநொச்சியின் தங்க மகளாக மாற்றியவர்கள்.

இவர்கள் தொடர்பில் தனுசியா குறிப்பிடும் போது

மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வரும் எஸ்.குமார் அவர்கள் எனக்கு முதன் முதலாக மேசைப் பந்தாட்ட விளையாட்டை பயிற்றுவித்தார். இதன் மூலம் நான் இவ்விளையாட்டை ஆர்வத்ததுடன் சக மாணவர்களுடன் சேர்ந்து பயின்று வந்தேன். விடுமுறை காலங்களிலும் ஓய்வு நேரங்களிலும் குமார் சேர் அவர்கள் எமக்கு மிகவும் சிரத்தையுடன் இவ்விளையாட்டை பயிற்றுவித்தார். அவரின் வழிநடத்தலில் நாமும் விரும்பி ஆர்வத்துடன் விளையாட கற்றுக்கொண்டோம். பாடசாலை நேரங்களை தவிர ஏனைய நேரங்களில் தனது தனியார் கல்வி நிலையத்திலும் எங்களை பயிற்றுவிப்பதில் தனது நேரத்தை செலவு செய்து வந்தவர். எனக் குறிப்பிட்ட தனுசியா தனது மற்றொரு குருவை பற்றி இப்படிக் கூறுகின்றார்

எனது பாடசாலை விளையாட்டுப் பொறுப்பாசிரியரான ம.வினோகாந்தன் அவர்கள் பாடசாலையில் எமது குழுவுக்கு மிகவும் அக்கறையுடன் பயிற்சிகளை வழங்கி வந்தார். யாழ்பாணத்திலிருந்து தினமும் வந்தும் கூட காலநேரம் பாராமல் எமக்கான பயிற்சிகளை வழங்குவார். அத்துடன் எமக்குத் தேவையான விசேடப் பயிற்சியை விசேட பயிற்சியாளர்களிடம் பெறுவதற்காக யாழ்பாணத்திற்குச் அழைத்துச்சென்று பயிற்றுவித்து வந்தார் இவ்விரு ஆசான்களும் எனக்கு கூடிய பயிற்சியை வழங்கியமையால் மாவட்டத்திலும் மாகாணத்திலும் தேசியத்திலும் என்னால் சாதிக்க முடிந்தது. என நன்றியோடு தனது பயிற்றுவிப்பாளர்களை பற்றிக் குறிப்பிட்ட தனுசியா

ஓவ்வொரு விளையாட்டின் போதும் நான் கேடயங்களை பெற்று வரும்போது குமார்சேர்; எனது வீட்டுக்கு வந்து என்னை தட்டிக்கொடுத்து பாராட்டுவார். அதேபோல் பாடசாலையில் வினோகாந்தன்சேர் என்னை மிகவும் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவார் இவர்களின் அக்கறையும் ஊக்கமும்தான் என்னை சாதனையாளராக வெளிக்கொணர முடிந்தது. ஓவ்வொரு முறையும் நான் புதிய புதிய குழுவுடன் போட்டியை எதிர்கொள்வதற்கு புதிய நுட்பங்களை எனக்கு கற்று கொடுத்து எனக்கு உத்வேகத்ததை ஏற்படுத்தி கொடுத்து இம்மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்தமையையின் பெருமை இவர்களையே சாரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் எனது பெற்றோர்கள், பாடசடாலை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவரும் வழங்கிய உதவிகள் ஒத்துழைப்புக்களுக்கு எனது சாதனைக்கு உதவியது என்றார்.

கிளிநொச்சியில் முதன் முதலாக தனுசியா மேசைப் பந்துப் போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதகம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த போதும் மாவட்டமும், மாவட்டக் கல்விச் சமூகமும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் விழா நடத்தும் எமது சமூகம் தனுசியாவுக்கு ஒரு பாராட்டு விழா அல்லது கௌரவிப்பு விழா நடத்தாமை கவலைக்குரிய விடயம் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்;.

றோல் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணி மூன்றாம் இடம் பெற்றதனை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று கடந்த மாதம பொது அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதன் போது தனுசியா உள்ளிட்ட வேறு விளையாட்டுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் றோல் போல் அணியுடன் சேர்த்து கௌரவிக்கபட்டிருந்தனர்.

ஆனால் தங்கப் பதக்கம் வென்று கிளிநொச்சியின் தங்க மகளாக வந்த சிறுமியை பாராட்டி கௌரவிக்க இந்த சமூகம் தவறிவிட்டது. தனுசியாவுக்கு மேற்கொள்ளும் பாராட்டும் கௌரவிப்பும் என்பது வெறுமனே தனுசியாவுக்கு மட்டுமானது அல்ல அது ஒரு முன்னுதாரணமான நிகழ்வாக ஏனைய பலரையும் எதிர்காலத்தில் பல பதக்கங்கள் வெல்ல உந்து சக்தியாகவும் அமைந்திருக்கும் ஆனால் கிளிநொச்சியின் தங்க மகளுக்கு கிளிநொச்சி அதனை செய்ய தவறிவிட்டது. என்பதே பலரின் கவலை.

Previous Post

ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி

Next Post

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் – மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் – மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In