கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமது பூர்வீக வாழிடத்தை மீட்பற்காக முல்லைத்தீவு கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இரவு பகலாக பனியிலும் குளிரும் இந்த மக்கள் போராடுகின்றனர். இந்த நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியாக இந்தப் போராட்டம் விஸ்தரிக்கப்படுகிறது.
இதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பிலும் இந்த மக்களுக்கு ஆதரவாக போராட்டம் இடம்பெற்றதுடன் யாழ்ப்பாணம் வவுனியாவிலும் கவனயீர்ப்புக்கள் இடம்பெற்றன.
காணிகயை விடுவிக்க அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தளபதி காணியை விடுவிக்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டபோதும், தமது காணிகளை விடுவிகக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் இராணுவத்தினர் காணிகளை கையளித்த பின்னரே போராட்டம் முடிவு பெறும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.