கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியும் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியை தாங்கள் இன்று செவ்வாய் கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநெச்சி நகரின் மத்தியில் 571 படைப்பிரிவின் கீழ் காணப்படுகின்ற குறித்த காணி தங்களின் ஆரம்ப பிரிவு கல்விக்குரிய காணி எனவும் அதனை மீளவும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி மகா வித்தியாலய சமூகம் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
இந்த நிலையில் குறித்த காணியை விடுவிக்கப் போவதாக படைத்தரப்பினரால் தங்களுக்கு அறிவித்தல் கிடைத்ததாகவும் தாங்கள் விடுவிக்கப்படவுள்ள காணியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். மேலும் குறித்த காணி அளவீடு செய்யப்பட்டு கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திம் ஒப்படைக்கப்படும் எனவும் அரச அதிபர் தெரிவித்தார்
0