விமானப்படையினரில் ஆக்கிரமிப்பில் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.
52 பேருக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினர் புதிதாக அமைத்துவரும் வேலிக்குள்ளும் பொதுமக்களின் காணிகள் காணப்படும் நிலையில், இக் காணிகள் தொடர்பில் இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.