ஜெனிவாவில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான நில்ஸ் மெல்சனின் அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சித்திரவதைகள் தொடர்வதான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், இந்தவிடயத்தில் அரசாங்கம் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்காது என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன், சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பாக வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் மங்கள சமரவீர கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது