கேப்பாப்புலவு மக்களின் நில மீட்புக்கான தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் கடந்த 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு எந்தவொரு தீர்வும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தமது போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டனர்.
தமது போராட்டத்தை அரசியல் தலைவர்கள் கூட கண்டு கொள்வதில்லை என தெரிவிக்கும் மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.