கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் வசமுள்ள அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி நாளை கண்டனப்பேரணி நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி விவசாய பண்ணைக்காணி, கிளிநொச்சி மகாவித்தியாலக் காணி, மாவட்டச் செயலக காணி, தேசிய இளைஞர்சேவை நிலையக் காணி, நீர்ப்பாசனத் திணைக்களக்காணி, உள்ளிட்ட காணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக படையினர் வசமுள்ளன.
இதனால் குறித்த அரச திணைக்களங்களின் செயற்பாடுகளில் இடர்பாடுகள் காணப்படுகின்றன.
எனவே அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க கோரும் கண்டப் பேரணி ஒன்றுக்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்டனப்பேரணி காலை 9 மணிக்கு வட்டக்கச்சி விவசாயப்பண்ணை முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.