தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த முதலாவது விடுதலைப் போராளி பொன். சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டுகிறது.
உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகாமையில் இன்றுகாலை 9.30மணியளவில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அன்னாரின் உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது
.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழர் சமூக சனநாயக கட்சியின் பொதுச்செயலர் சிறீதரன், வட மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன், அனந்தி சசிதரன், பரஞ்சோதி, வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராஜா, உள்ளிட்டோருடன் சிவகுமாரன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர்ப் பெரியோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களில் ஒருவரா விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.
1950ம் ஆண்டு யூன்மாதம் 26ம் நாள் பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார்.
1974ம் ஆண்டு யூன் 5ம்நாள் பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது பொன். சிவகுமாரன் அவர்கள் அவர்களிடம் அகப்படாமல் சைனைட் அருந்தி தனது உயிரினை ஆகுதி ஆக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.