ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் லைட், மெசெஞ்சர் லைட் போன்ற சேவைகளையும் அறிமுகம் செய்தது. இதில் மெசெஞ்சர் லைட் கடந்த வருடம் வெளியானது. முதல்கட்டமாக ஒரு சில நாடுகளில் மட்டும் வெளியான மெசெஞ்சர் லைட், பின்னர் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
Messenger Lite.
ஃபேஸ்புக் லைவ், ஹை குவாலிட்டி வீடியோ ஸ்ட்ரீமிங், கலர் கலரான ஸ்டேட்டஸ் வசதிகள் என 4G யூசர்களுக்கு ஃபேஸ்புக் மொபைல் அப்பில் நிறைய வசதிகள் இருந்தாலும், ஒரு 2G யூசர் எதிர்பார்ப்பது என்னவோ, ஸ்டேட்டஸ் மற்றும் கமென்ட்ஸ் வசதிகளை மட்டும்தான். இந்த அடிப்படை வசதிகளை மட்டுமே தந்து ஹிட் அடித்தது ஃபேஸ்புக் அப்பின் லைட் வெர்ஷன். அதே வரிசையில் மெசெஞ்சர் லைட்டும் இடம் பிடிக்குமா? என பார்க்க வேண்டும்.
முழுமையான மெசெஞ்சர் அப் சைஸ் 50 MB என்றால், இந்த லைட் வெர்ஷன் 5 MB-யிலேயே முடிந்துவிடுகிறது. அதிக மெமரியை எடுத்துக்கொள்ளும் சிக்கல் இல்லாததால், குறைந்த அளவு இன்டர்னல் மெமரி கொண்ட போன்களுக்கும் ஏற்றபடி மெசெஞ்சர் லைட் இருக்கிறது.
மெசெஞ்சரின் முழு வெர்ஷனில் இருக்கும் Gif ஃபையில் அனுப்பும் வசதி, சட் பாட்ஸ், வொய்ஸ் கோல் மற்றும் வீடியோ கோலிங், ஸ்டோரீஸ், சட்டிங்கில் இருக்கும் எமோஜி ரியாக்ஷன்கள் போன்றவை எல்லாம் இதில் இருக்காது. வீடியோ கோலிங் மற்றும் வோய்ஸ் கோலிங் வசதிகளுக்குப் பெரும்பாலானோர் மெசெஞ்சரைப் பயன்படுத்துவதே கிடையாது என்பதால், அவை இல்லை என்பதெல்லாம் இதில் குறையே இல்லை.
மற்றபடி, வட்ஸ்அப் போலவே இன்ஸ்டன்ட்டாக மெசேஜ்கள் அனுப்பவும், உரையாடவும் இந்த லைட் அப் நல்ல ஒப்ஷன். குறிப்பாக மொபைலின் ஃபேஸ்புக் அப்பில் மெசேஜ் பக்கம் சென்றாலே, மெசெஞ்சரை இன்ஸ்டால் செய்யச் சொல்லும் ஃபேஸ்புக்கிற்காக விருப்பமின்றி 100 MB-களுக்கு மேல் இனி இழக்கத் தேவையில்லை.
குறைவான டேட்டாவை இழுக்கும் அண்ட்ரொய்டு லைட் அப்பை இன்ஸ்டால் செய்தே சமாளித்துக் கொள்ளலாம். எனவே மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களை விடவும், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குத்தான் இது சிறப்பாக இருக்கும்.
மொத்தத்தில் குறைவான அப் சைஸ், 2G நெட்வொர்க்கிற்கிலும் கைகொடுக்கும் வேகம், குறைவான டேட்டா பயன்பாடு, அந்த மெசெஞ்சரின் அதே தோற்றம், குறைவில்லாத அடிப்படை அம்சங்கள் எனப் பயன்படுத்த எளிமையாக இந்த அப் இருக்கிறது.
இந்த வசதிகளுடன் கூடுதலாக, ட்ரெண்ட்டிற்கு ஏற்ப எமோஜிக்கள் மற்றும் Gif ஒப்ஷன்களையும் சேர்த்தால் நிச்சயம் லைட் வெர்ஷனுக்கு ஒரு லைக் போடலாம். அண்ட்ரொய்டு போன்களுக்கான இந்த அப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.