வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஜிலின் மாகாணத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதி வெள்ளத்தில் மூழ்கின. அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. கரை புரண்டோடிய வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிர் இழந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெள்ள கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரணக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிலின் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு அதிகமான மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான 18 பேரை தேடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.