இந்திய ஜனாதிபதி தேர்தலுவுக்கான வாக்குப்பதிவு, தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது.
காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில், 12 மணிக்குள் தமிழகத்தில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. இதில் 234 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
அத்துடன், உடல் நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வாக்களிக்கவில்லை. ஏனைய பகுதிகளில் தொடர்ந்தும் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் – முதலமைச்சர் வாக்களிப்பு (2ஆம் இணைப்பு)
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
வாக்களிப்பு காலை 10 மணிக்கு ஆம்பமாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தமது வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.
குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் பிரதர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.
அத்தோடு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்துள்ளார்.