பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிவரும் நிலையில், அவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் முன்வந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், வேறு வழிவகைகள் மூலமும் தமது வீடுகளிலும், வளவுகளிலும் இடம்பெயரும் குடும்பங்கள் தங்குவதற்கான இடங்கள் உள்ளதென அவர்கள் பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர்.
அதேபோல இடம்பெயரும் மக்கள் தமது செல்லப்பிராணிகள், மற்றும் குதிரை, ஆடு, மாடு, கோழி போன்றவற்றை தமது இடங்களில் விட்டுப் பராமரித்துக் கொள்ளலாம் எனவும் அவர்; பதிவிட்டுள்ளனர்.
இதனால் மக்கள் இலகுவாக தமது தங்குமிடங்களை இனங்கண்டுகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.