தனுஷ் படங்களுக்கு இசையமைக்காததற்கு நேரமின்மையே காரணம் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷும், அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்திய தனுஷின் எல்லா படங்களுக்கு அனிருத்தான் இசையமைத்திருந்தார். இடையில் தனுஷின் இரண்டு படங்களுக்கு இசையமைக்கவில்லை. அதற்கு அனிருத்திடம் காரணம் கேட்டதற்கு எனக்கு நேரமில்லை என்று கூறியுள்ளார்.
தனுஷ் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வந்த அனிருத் ‘பவர் பாண்டி’ மற்றும் ‘விஐபி 2’ ஆகிய படங்களில் இசையமைக்கவில்லை. இதுகுறித்து பலரும் பலவிதமாக பேசி வந்தனர். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது என்றும் பல செய்திகள் வெளியானது