ஸ்காபுரோவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
மிட்லேண்ட் மற்றும் எக்லின்டன் சந்திப்புக்கு அருகாமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் பேருந்தில் இருந்து இறங்கும் போது கால் தவறி வீழ்ந்த நிலையில், பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அவரின சடலத்தை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ள பொலிஸார், இவ்விபத்து குறித்து தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.