அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களை தங்க வைப்பதற்கான மாற்று இடம் ஒன்று குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
மானுஸ் மற்றும் நவுறுத்தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான தமிழ் அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒபாமா நிர்வாகத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த குடியேற்றம் தொடர்பான உடன்படிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் கைவிடவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பப்புவா நியுகினி நாட்டின் தீவுகளான மானுஸ் மற்றும் நவுறு ஆகியவற்றில் உள்ள முகாம்களை மூடுவதற்கு அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை குடியேற்றுவதற்கு மாற்று இடம் ஒன்றை அவுஸ்திரேலியா விரைவில் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.