பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலைமை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் உள்ளகப் பகுதிகளில் கட்டுக்கடங்காது எரிந்துவரும் காட்டுதீயின் தணிவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தெரியாத நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய முதல்வர் ஜோன் ஹோர்கன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்த காட்டுத்தீ காரணமாக ஏற்கனவே 45,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவைப்பதே தமது முதற்கட்ட கடமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய முதல்வராக இன்று தனது முதலாவது முதல்நாள் சட்டமன்ற அமர்வினை முடித்துக்கொண்ட அவர், சட்டமன்றுக்கு வெளியே ஊடகவியலாளர்கன் மத்தியில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறியு்ளளார்.
காட்டுத் தீ இதுவரை 3,500 சதுரக் கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவினை தீக்கிரையாக்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும், இடம்பெயர்ந்த மக்களுக்கும் மேலதிக உதவிகளை வழங்கவேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே, அதனை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்புச் செய்வதாக அறிவித்துள்ள அவர், அவசரகால நிலைமையினை தொடரவேண்டிய சூழ்நிலை தொடர்ந்து நிலைவுவதையும் சுட்டிக்காட்டியு்ள்ளார்.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள் 14நாட்களைக் கடந்திருந்தால் அவர்களுக்கு 600 டெலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் எனவும், கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.