பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களை இரத்துச் செய்யுமாறு ஐநா பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், விடுதலைப்புலி சந்தேக நபர்கள் காவல்துறையினரிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலங்கள் அனைத்தையும் இரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத்தை ஒழிக்கும் உத்தேச சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு மனித உரிமைப் பேரவை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்த உத்தேசத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு எதிர்வரும் இரண்டு கிழமைக்குள் ஐநாவுக்குப் பிரதிநிதிகளை அனுப்புமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒப்புதல்மூலத்தினை இரத்துச் செய்வதன்மூலம் அவர்களை விடுதலை செய்வதற்கு ஐநா முயற்சிப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.