கிரிக்கெட்டின் போர் என வர்ணிக்கப்படும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இம்முறை அவுஸ்ரேலிய அணியே வாகை சூடும் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோன்சன் கணித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய தொடராக கருதப்படும் ஐந்து போட்டிகளை கொண்ட ஆஷஸ் தொடர், இம்முறை அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து மிட்செல் ஜோன்சன் கூறுகையில் ”ஆஷஸ் தொடரில் பங்கேற்பதாக அவுஸ்ரேலிய வரும் இங்கிலாந்து அணி சில பிரச்சினைகளை கொண்டுள்ளது. அவுஸ்ரேலியவிற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் சீரான அணியை பெற்றிருக்கவில்லை. அவர்கள் அணியை சற்று மாற்றியுள்ளனர். 11 பேர் கொண்ட சரியான அணியை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆஷஸ் தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சமயத்தில் அணியை மாற்ற முயற்சி செய்தால் அது கடினமானதாகிவிடும். ஏனென்றால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் ஒரு வீரர் களம் இறக்கப்படும்போது, அவர் அந்த அணியின் தலைசிறந்த வீரராக திகழ்வார் என்பதுதான் பொருள். ஆனால் இங்கிலாந்தில் அணியில் 3வது வீரராக களம் இறங்கும் பேலன்ஸ் சிறந்த வீரர் என்று நான் நினைக்கவில்லை.
ஒரு பந்து வீச்சளாராக இருந்து துடுப்பாட்ட வீரரா கேரி பேலன்ஸை 3வது வீரராக களமிறங்குவதை பார்த்தால் அதிக நம்பிக்கை பெறுவீர்கள். அவுஸ்ரேலிய அணிக்கும் அதிக நம்பிக்கை இருக்கும். ஜோ ரூட், அலைஸ்டைர் குக் போன்ற சில சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும் பெற்றுள்ளார்கள். இதனால் தொடர் சிறப்பானதாக இருக்கும். அதுபோல் சில குறைபாடுகளும் உள்ளன” என கூறினார்.


