தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டுக்கான 13பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர் கேரி பேலன்ஸ், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிராந்திய அணியான எசக்ஸ் அணிக்காக விளையாடி வரும் டொம் வெஸ்லே சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், மற்றுமொரு பிராந்திய அணியான மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடி வரும் டேவிட் மாலன் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட்டுக்கான 13பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம்:
ஜோ ரூட்(அணித்தலைவர்), மொயின் அலி, ஜிம்மி ஆண்டர்சன், ஜோனி பேர்ஸ்டோவ், ஸ்டுவர்ட் பிரோட், அலைஸ்டர் குக், லியாம் டாவ்சன், கீட்டன் ஜென்னிங்ஸ், டொம் வெஸ்லே, டேவிட் மாலன், டோபி ரோலண்ட்-ஜோன்ஸ், பென் ஸ்டோக்ஸ், டொம் வெஸ்டில், மார்க் வுட்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 27ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை நடந்து முடிந்துள்ள இருபோட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது.