என் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
தான் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் கூறினார்.
இதேவேளை அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ் மேல் நீதிமன்றத்தில் காணப்படும் பாராதூரமான வழங்குகளை நான் நெறிப்படுத்தி வருவதினால் இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் என் மீதே நிகழ்த்தப்பட்டது என நம்பகிறேன்.
எனது பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று சொல்ல முடியாது. என்னைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாகவே நான் கருதுகின்றேன். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை எனது வாகனத்தில் ஏற்றி நானே யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றேன்.