தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் போது இல்லாத இரசிகர்களின் ஆதரவு, தற்போது பிரபல இந்திய தொலைக்காட்சி நிறுவனமொன்று நடத்தும் நிகழ்சியில் ஓவியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாகவே யாமிருக்க பயமே இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாலாஜி தரணிதரன் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் புதிய படத்திற்கும் நடிகையாக ஓவியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த கூட்டணி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.