அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் புதிய செயலாளராக சாரா ஹக்கபி சாண்டர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளராக இருந்த சீன் ஸ்பைசர் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு இவர் மீள்நிரப்பபட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக சாரா ஹக்கபி சாண்டர்ஸ், வெள்ளை மாளிகையின் துணை ஊடக செயலாளராக பொறுப்பு வகித்தார் ஆவார்.
அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தோடு கருத்து மோதல் ஏற்பட்டு கடந்த மே மாதத்தில் இராஜினாமா செய்தார். இதனால், வெற்றிடமாக இருந்த அப்பொறுப்புக்கு நியூயோர்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுச்சியை நியமித்து ட்ரம்ப் உத்தரவிட்டார்.
டிரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளராக இருந்த சீன் ஸ்பைசர் தனது பதவியை அதிரடியாக இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது