யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸ் குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா .இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.