யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வரும் ஆசிரியர்களின் வருகை மிகக்குறைவாக காணப்பட்டுள்ளதோடு, கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அரச உத்தியோகத்தர்களின் வருகையும் குறைவாக காணப்படுவதோடு, பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ். நகரம் மற்றும் ஏனைய பகுதிகளிலும் போக்குவரத்து இன்மையால் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.