ஜி-7 நாடுகள் மத்தியில் கனடாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பாண்டில் துரிதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார கண்ணோட்டத்தில் அடிப்படையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பீட்டின் பிரகாரம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.9 சதவீதமாக இருந்த கனேடிய பொருளாதாரம் 2017 இல் 2.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டு பகுதியில் கனடா பொருளாதார ரீதியில் வலுவான வளர்ச்சியை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சர்வதேச பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு 3.5 சதவீதமாகவும் 2018 இல் 3.6 சதவீதமாகவும் இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.