தனது மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து அழுத சம்பவத்தை கண்டு “ஆழமாக நெகிழ்ந்தேன்” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.
இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்று முன்தினம் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் வீழ்ந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதார்.
இது குறித்த காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், இந்த சம்பவத்தை கண்டு “ஆழமாக நெகிழ்ந்தேன்” எனவும் பதிவிட்டுள்ளார்