இந்தியாவின் 14ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் சற்று முன்னர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இன்று பகல் 12.15 மணிக்கு ஆரம்பமான குறித்த பதவியேற்பு விழாவின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹார், ராம்நாத் கோவிந்திற்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க புதிய ஜனாதிபதிக்கு அரசு மரியாதை வழங்கப்பட உள்ளது.
இதேவேளை குறித்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி உட்பட அனைத்து மாநில முதல்வர்களும், ஆளுநர்களும், மத்திய அமைச்சர்களும் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.