ஒன்ராறியோவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் பேவிவ் அவெனிவ் மற்றும் யோர்க் மில்ஸ் வீதி ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் பிரதான நீர்க்குழாய் வெடித்ததில் குறித்த பகுதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து அந்த வீதி பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. இதனால் புதைகுழி ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தினால் பாதுகாப்பு கருதி போக்குவரத்து தடைசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நிலைமை குறித்து கண்காணிக்கவும், சேதம் தொடர்பில் மதிப்பீடு செய்யவும் நகர அதிகாரிகள் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த வீதி எப்போது சீரமைக்கப்பட்டு, மீளத் திறக்கப்படும் என்பது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.