யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் பிரேசந்திரவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலாராக இருந்த பொலிஸ் சார்ஜன்டான அவர், தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரினால் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நல்லூர் வீதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நீதிபதியின் பாதுகாவலரான சரத் பிரேமசந்திர உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.