நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று காலை யாழ் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் நல்லூர் துப்பாக்கிச்சூடு: தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் போலிஸாரிடம் சரண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கை போலிஸார்(கோப்புப் படம்)
கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான பின்வீதி வழியாக பயணம் செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.
அந்த நாற்சந்தியில் நிலவிய வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தி நீதிபதியின் கார் தடங்கலின்றி செல்வதற்குரிய கடமையில் ஈடுபட்டிருந்த அவருடைய மெய் பாதுகாவலராகிய சார்ஜன்ட் சரத் பிரேமச்சந்திரவின் உடைமையில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் நீதிபதியின் காரை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதில் பிரேமச்சந்திர வயிற்றில் படுகாயடைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்தார்.