மொஸ்கோவுக்கு எதிரான புதிய பொருளாதார தடைகள் குறித்த சட்டமூலத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளமையானது வொஷிங்டனுடன் உறவுகளை முன்னேற்றுவதற்கான வாய்ப்புக்களை அழிக்கும் தீவிர நடவடிக்கை என ரஷ்யா எச்சரித்துள்ளது.
இது குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ், ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதார தடைகள் தீர்வாக அமையாது என பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது. தடைகளை கையாள்வதில் மொஸ்கோ சோர்வடைந்துள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதார தடைகள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவை தள்ளிவைக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதார தடைச் சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான டிரம்பின் நம்பிக்கையை இந்த சட்டமூலம் சிக்கலாக்கலாம் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.