வவுனியா தாலிக்குள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் முப்பது குடும்பங்களுக்கும், உப குடும்பங்களுக்கும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டு உடைமைகள் அனைத்தையும் இழந்து அகதி வாழ்வு வாழ்ந்த பின்னர் இங்கு குடியேறியிருந்த நிலையில் கூட, தற்போது வரை எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையினால், சொந்த நிலத்திலேயே அகதி போன்று வாழ வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்