வவுனியா மாவட்ட செயலகக் கட்டடத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கழட்டி எறிந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இவ்வாறு தேசியக் கொடியை கழட்டி எறிந்து விட்டு செல்லும் போது மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்த முயற்சி எடுத்த போதிலும் குறித்த நபர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலாளர் எம்.பீ.ஆர். புஷ்பகுமார வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், தற்பொழுது தேசியக் கொடி மீண்டும் ஏற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.