யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
யாழ். நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 வயதுடைய சரத் ஹேமச்சந்திர என்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டுள்ளார்.
இவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நாளை சிலாபத்தில் நடைபெறவுள்ள நிலையில், இன்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிலாபத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்