பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ அடுத்த வாரம் அங்கு செல்லவுள்ளார்.
இதற்கான திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் அங்கு சென்று நிலைமைகளை கண்டறிந்து உதவிகளை வழங்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், வடக்கு வன்கூவரிலிருந்து கிட்டத்தட்ட 350கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள தொம்சன்-நிக்கோலா பிராந்திய மாவட்டம் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவில் இன்னமும் 36 இடங்களுக்கான வெளியேற்ற உத்தரவும், 40 இடங்களுக்கான வெளியேற்ற எச்சரிக்கையும் இன்னமும் நடப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது