யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் நீதிமன்ற சட்டத்தரணிகளால் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சட்டத்தரணிகள், உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு தமது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, நீதித்துறையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிய சட்டத்தரணிகள், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.