அர்ஜீன் நடித்துள்ள நிபுணன் திரைப்படம் இன்று திரைக்கு வரவுள்ளது. இது அர்ஜீன் நடிக்கும் 150ஆவது படம் என்பதும், இந்தப் படம் தனிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிபுணன் ஒரு ஆக்ஸன் படம் என்பதால் இரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்றும், அதிகளவிலான மக்கள் திரையரங்குகளிற்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் குறித்த படத்தில் அர்ஜூன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி, ஆகியோர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அருண் வைத்யநாதன் இயக்கியுள்ளார். இவர் 2009ஆம் அண்டு வெளிவந்த ‘அச்சமுண்ட அச்சமுண்டு’ படத்திற்கு பின்னர் தமிழில் இயக்கும் படம் நிபுணன் என்பது குறிப்பிடத்தக்கது.