இலங்கை தமிழ் அகதிகளை ஓசன் லேடி கப்பலில் கனடாவுக்கு கடத்தி வந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த நான்கு தமிழர்களை பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. பிரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பு, கமல்ராஜ் கந்தசாமி, ஜெயச்சந்திரன் கனகராஜ், விக்னராஜா கனடாவில் அடைக்கலம் தேடும் அகதிகளை இலாப நோக்கில் கடத்துவதற்கு இவர்கள் பொறுப்பாக இருந்தனர் என அரசதரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். எனினும், சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்த நீதிபதி ஆர்னே சில்வர்மன், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் ஓசன் லேடி கப்பல் 79 தமிழர்களுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.தேவராஜ் ஆகிய நால்வரே ஆட்கடத்தல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.