பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம் சேர்த்தார் என்றும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள், எஜாஸ் ஹசன், எஜாஸ் அஃப்சல், சயீத் ஷேக், ஆசிஃப் சயீத் கோசா மற்றும் குல்ஜார் அகமத் ஆகியோர் அடங்கிய ஐந்து உறுப்பினர் சட்ட அமர்வு நவாஸ் ஷெரீஃப் குற்றம் செய்திருப்பதாக தீர்ப்பு வழங்கியது.
கோசா மற்றும் குல்ஜார் அகமத் ஆகிய இருவரும் பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தின் முதல்கட்டத்திலேயே நவாஸ் ஷெரீஃப் குற்றவாளி என்று கூறிவிட்டார்கள். இருந்தாலும், மீதமுள்ள மூன்று நீதிபதிகளும் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர். தற்போது நவாஸ் ஷெரீஃப் தவறிழைத்ததாக ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளன