நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் கூறினார்.
அத்தியாவசிய சேவை சட்டமூல வாக்களிப்புக்கு மத்தியில் இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய நாடாளுமன்றம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நான்காம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்று நிலையில் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.
கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் விநியோக சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.