பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகபேக்கிற்கு செயற்கை அறிவு பற்றி முழுமையான புரிதல் இல்லை என அமெரிக்காவின் மற்றொரு தொழிலதிபரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்.டி.பிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை அறிவு குறித்து அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த எலாஸ் மஸ்க், “செயற்கை அறிவு குறித்து மார்க் ஸுகபேக் பேசியதாகவும், அதுகுறித்த முழுமையான புரிதல் அவருக்கு இல்லை” என்று அவர் தனது பதிவை வெளியிட்டிருந்தார்.
உலகம் அழிந்துவிடும் என்ற தேவையற்ற பயத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் என்றும் மார்க் ஸுகபேக் இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மார்க் ஸுகபேக் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியோரின் பெயர்களுக்கு டெக் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.