முகநூலினை அதிகளவிலானோர் பயன்படுத்துவதற்கும் அப்பால் வீடியோக்களை தொலைக்காட்சி அல்லது யூரியூப்பில் பார்ப்பதை விட முகநூலில் பார்ப்பவர்கள் தான் அதிகம். எனவே முகநூலில் தொலைக்காட்சி கொண்டுவரும் நடிவடிக்கையின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் முதல் முகநூலில தொலைக்காட்சி கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அட்டவணைகளை தயாரிக்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் முகநூலில தொலைக்காட்சி வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளமையினால் குறித்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடவுள்ளதாகவும் அதனைபார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.