ரஷ்யா மீதான புதிய தடைகள் குறித்த சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திடவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இருப்பினும் குறித்த தடை தொடர்பான முக்கிய விடயங்களை கலந்தாலோசித்தமையின் பின்னரே அவர் மேற்படி சட்டமூலத்தில் கைச்சாத்திடுவார் என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் குறித்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை குறைக்கவும் சொத்துக்களை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு தடை விதித்தும் ரஷ்யா உத்தரவிட்டது.
2014 ஆம் ஆண்டு கிரைமிய தீபகற்பத்தை ரஷ்யா தனதாக்கிக் கொண்டமை மற்றும் 2016 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஆகியன தொடர்பிலேயே புதிய தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.