யாழ்.கோப்பாய் பொலிஸார் மீது இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள் வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி இரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
கொக்குவில் நந்தாவில் அம்மன் வீதி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதி வழியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்றுகொண்டிருந்த வேளை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 க்கும்மேற்பட்டவர்கள் பொலிஸார் இருவர் மீதும் கண்மூடித்தனமாக வாளினால் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் இரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சுரேன் மற்றும் தம்பிக்க ஆகிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே காயமடைந்துள்ளனர்.