ஈழத்து யுத்தத்தில் மிக மோசமான பாதிப்பிற்குள்ளான கிளிநொச்சி மாவட்டம் அறிவியல் நகரில் ‘குடில் உற்பத்திகள்’ தொழில்சார் மையம் 31.07.2017 திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தினை மையமாகக்கொண்ட ‘குடில் தயாரிப்புகள்’ நிறுவனமும் இந்தியா கோயமுத்தூர் ‘எக்கோ இன்ஜினீயரிங்’ அமையமும் இணைந்த கூட்டுப்பணியாக இது இடம்பெற்றது. நிகழ்வில் இலங்கையின் நல்லிணக்க சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன், இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், எம்.சுமந்திரன், குடில் உற்பத்திகள் இயக்குநர் பிரசாந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் செரின், கெளரி அனந்தன், தமிழ் மிரர் ஆசிரியர் மதன், கோயமுத்தூர் எக்கோ இன்ஜினீயரிங் பாபு உள்ளிட்டோரும், பொது அமைப்புப் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கமுகு மட்டை, வாழை மட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களினைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் இப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். யுத்தத்தில் பாதிப்புற்ற பலருக்கான வேலை வாய்பிடமாகவும் இவ்விடம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.