முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யுத்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த போராட்டங்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இன்று, கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முல்லைத்தீவில் இன்று காலை பேரணி இடம்பெற்று அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்படுவதோடு, மாலை வேளையில், கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்று அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.