யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோப்பாய் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மர்மநபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஆவா குழுவின் செயற்பாடா என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.