யாழ். நகர நடைபாதை வியாபாரிகளின் நலன்கருதி அமைக்கப்பட்ட கடைத்தொகுதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் கோரிக்கைக்கமைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான காணியில் 76 கடைத்தொகுதிகளை கொண்டதாக இந்த நகர மத்தி கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனின் ஆலோசனையின் பேரில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 13 மில்லியன் நிதியில் இக்கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வட.மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஆர்னோல்ட் அயூப், அஸ்மின், விந்தன் கனகரட்ணம், அரியகுட்டி பரம்சோதி, மேலதிக அரச அதிபர் சுகுணவதி தெய்வேந்திரம், யாழ் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.