சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று புதன் கிழமை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக மருத்துவா்கள் மற்றும் மருத்துவபீடம் மற்றும் பொறியியல் பீட மாணவா்கள் ஆகியோh் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனா்.
சைட்டம் தனியாh் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனை நிறுத்த கோரியே இந்தக் கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண் எனும் அமைப்பினா் இதனை மேற்கொண்டுள்ளனா்.
சைட்டம் தனியார் பல்கலைகழகத்தில் மருத்துவ பீடம், பொறியியல் பீடம், சட்ட துறை பீடம் என பல பீடங்கள் உள்ள போதும், மருத்துவ பீடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதுசைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மாவட்ட அரச வைத்தியதிகாரிகள் சங்க தலைவர் எஸ்.கௌரிசங்கர் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான அரச வைத்தியதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் கௌரிசங்கர் ‘நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றதைப் போன்று சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தையும் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்போராட்டம் நடாத்தப்படுவதாக தெரிவித்தார்.
அத்துடன் சைட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த போராட்டம் இன்று நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் வைத்தியர்கள், மருத்துவ பிரிவு மாணவர்கள், கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்கம் ஆகியன இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ஹற்றனில் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலவசக் கல்வியை இல்லாதொழித்து நோயாளர்களை ஆபத்தில் தள்ளும் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியும் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை, மக்கள் மகஜர் ஒன்றைத் தயாரித்து, சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை டிக்கோயா வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் கறுப்புப்பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.