ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு அறிவிக்காது சுமார் 16 தங்க பிஸ்கட்களை இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் வைத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 26ம் திகதி மன்னார் பேசாலை கடற்பரப்பில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்படவிருந்த 16 தங்க பிஸ்கட்களை, இரண்டு காவல்தறை கான்ஸ்டபிள்கள் மீட்டிருந்தனர்.
புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் இந்த தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்கத்தைப் பறிகொடுத்த நபர் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணைகளின் போது புலனாய்வுப் பிரிவு என்ற போர்வையில் இந்த தங்கத்தை அபகரித்துச் சென்ற இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.